Sunday, 27 March 2016

மோட்டார் வாகன சட்டம்   அபராத விவரம்

மோட்டார் வாகன சட்டம்   அபராத விவரம்

மோட்டார் வாகன சட்டம் 177 (ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து விதிகளை மீறுவது, தலைக்கவசம் அணியாதது, அதிக நபர்களை ஏற்றிச் செல்வது),
182 (2) (சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது) முதல் முறை 100 ரூபாய், இரண்டாம் முறை 300 ரூபாய்.
பிரிவு 179 (பொய்யான தகவல் தருவது),
181, 182 (1) (லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டுவது),
189 (அனுமதியின்றி சாலையில் சசாதனைசயாட்டம்),
191 (அனுமதியின்றி வாகனத்தின் வடிவமைப்பை மாற்றுவது) 500 ரூபாய்.
பிரிவு 183 (1) (சவகமாக வாகனம் ஓட்டுதல்) முதல்முறை 400 ரூபாய். மறுமுறை 1,000 ரூபாய்.
பிரிவு 184 (விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை விரட்டிச் செல்லுதல்) முதல் முறை 1,000 ரூபாய், மறுமுறை 2,000 ரூபாய்.
பிரிவு 186 (தகுதியற்றவர்கள் வாகனம் ஓட்டுவது) முதல் முறை 200 ரூபாய், இரண்டாம் முறை 500 ரூபாய்.
பிரிவு 190(2) ( காற்று மற்றும் ஒலி மாசுபடுத்துதல்) முதல்முறை ஆயிரம் ரூபாய். இரண்டாம் முறை இரண்டாயிரம் ரூபாய்.
பிரிவு 192(1) (பதிவு செய்யாமல் வாகனத்தை ஓட்டுவது) முதல்முறை 2,500 ரூபாய். இரண்டாம் முறை 5,000.
பிரிவு 194(1) (அள வுக்கு அதிகமான எடை ஏற்றிச் செல்லுதல்) 2,000 ரூபாய் மற்றும் கூடுதல் எடைக்கு டன் ஒன்றுக்கு 1,000 ரூபாய்.
பிரிவு 196 ( காப்பீடு செய்யாதது) இருசக்கர வாகனம் 500 ரூபாய், சொந்த வாகனம் 700 ரூபாய், போக்குவரத்து வாகனம் 1,000 ரூபாய். இரண்டாம் முறை என்றால் அனைத்து வாகனங்களுக்கும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
கோ,ஜெயமணிகண்டன்
ஆம் ஆத்மி கட்சி
விருதுநகர் மாவட்டம்

No comments:

Post a Comment