Thursday, 17 March 2016

இ-ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?

இ-ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஆதார் அட்டை
ஆதார் அட்டையை பதிவிறக்க தேவையானவை
பதிவு ஐடி / ஆதார் எண்ஏற்றுகொள்ளல் ரசீதில் (acknowledgement slip) உள்ள படிமுழுப் பெயர்அஞ்சல் குறியீடு எண்பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ஆதார் கடிதம் மற்றும் கடிதம்
மேலும் ஆதார் கடிதம் மற்றும் ஆதார் அட்டை கூட ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இதற்கு தேவையானவை ஆதார் அட்டை பதிவு செய்த பதிவு எண், தேதி மற்றும் நேரம் அல்லது ஆதார் அட்டை எண். இ-ஆதார் அட்டை பதிவிறக்குவது எப்படி என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்
செயல்பாடு 1
முதலில் ஆதார் அமைப்பின் இணைய தளத்திற்கு செல்ல வேண்டும். இதை கிளிக் செய்யவேண்டும். https://eaadhaar.uidai.gov.in/ பின்பு 14 இலக்க ஆதார் பதிவு எண்ணை உள்ளிடவும், ஆதார் ஏற்றுகொள்ளல் ரசீதில் உள்ள 14இலக்க தேதி, நேரம் குறித்த எண்ணை உள்ளிடவும். ஆதார் அட்டைக்கு தேவையான விவரங்கள் அதாவது பதிவு எண், தேதி, நேரம், பெயர், பின்கோடு மற்றும் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்ச்சா(captcha)வை பூர்த்தி செய்யவும்.
செயல்பாடு 2
கொடுக்கபட்ட தரவுகள் சரியாக இருந்தால் பதிவு செய்யப்பட்ட கைபேசிக்கு OTP(ஒரு முறை கடவுச்சொல்) கிடைக்கப்படும்.அதை உரைபெட்டியில் உள்ளிடவும்.
செயல்பாடு 3
OTP (ஒரு முறை கடவுச்சொல்) உள்ளிடப்பட்டதும் ஆதார் அட்டையை பதிவிறக்கிக் கொள்ளலாம். ஆதார் அட்டை அல்லது ஆதார் அட்டைக்கு பதிலாக பயன்படுத்தும் கடிதத்தை கொண்ட PDF கோப்பை பதிவிறக்க கேட்கும்.
ஆதாரம் : மாநில ஆதார் மையம். தமிழ்நாடு அரசு
கோ.ஜெயமணிகண்டன்
ஆம் ஆத்மி கட்சி
விருதுநகர் மாவட்டம்

No comments:

Post a Comment