Thursday, 20 October 2016

உழவர் பாதுகாப்பு திட்டம்

உழவர் பாதுகாப்பு திட்டம்

உழவர் பாதுகாப்பு திட்டம் அவசாணை பலவகை எண் 265 வருவாய் (நிலசீர்த்திமற்றும்1(2) துறை நாள்10.9.2011ன் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் மூலம் நிலமற்ற விவசாயகூலி வேலை செய்பவர்களுக்காகவும், குத்தகை முறையில் விவசாயம் செய்யும் விவசாயகளுக்காகவும் இப்பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. செப்டம்பர் 2011 10ம் நாள் முதல் இத்திட்டம் செயலுக்கு வருகிறது இத்திட்டத்தின் முலம் பலவகையான நலத்திட்ட நிதி உதவிகள் பதிவு பெற்ற உழவர்களுக்கு வழங்கப்படுகிறது.

உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதிகள்

 

சொந்த 18 மதல் 65 வயது வரையுள்ள 

 

பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத  உழவர்கள் நஞ்சை நிலமாக இருந்தால் 2.50 ஏக்கருக்கு மிகாமலும் புஞ்சை நிலமாக இருந்தால் 5 ஏக்கருக்கு மிகாலும் குத்தகை அடிப்படையில் சொந்த விவசாயம் செய்யும் விவசாயிகள் இத்திட்டம் மூலம் பயன்பெற தகுதியுடையவராகிறார்கள். எவ்வித வேறு வருமானமும் இல்லாத பதிவுப்பெற்ற விவசாயகளின் கீழ்க்கண்ட உறவினர்கள் இத்திட்டத்திற்காக உழவர்களை சார்ந்தவராக கருதப்படுவார்கள்
அ) மனைவி(அ) கணவன்
ஆ) குழுந்தைகள்
இ) குழந்தைகள் மற்றும் இறந்த விட்ட மகனின் மனைவி
ஈ) பெற்றோர்கள்

இத்திட்டத்தின் கீழ் பதிவு பெற கட்டணம் எதுவும் கிடையாது

 

கீழ்கண்ட வேலைகள் வேளாண்மை தொடர்புடைய பணிகளாக கருதி இத்திட்டத்தின் கீழ் உழவராக பதிவு பெற தகுதியாக எடுத்து கொள்ளலாம்.

தோட்ட வேலைகள்பட்டுப்ப்பூச்சி வளர்த்தல்பயிர்கள் பயிரிடல்,புல் வளர்த்தல்நிலம் முழுவதையுமோ அல்லது பகுதி நிலத்தையோ மேய்ச்சல் புல்வெளியாக பயன்படுத்துதல்இயற்கை உரங்களை தரும் பயிர்களை பயிரிடல்பால்பண்னை நடத்துதல்கோழியினங்கள் வளர்த்தல்ஆடுமாடு வளர்த்தல்மரங்கள் வளர்த்தல்உள்நாட்டு மீன் வளர்த்தல்

இத்திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள்

உறுப்பினர்கள் திருமணம்உறுப்பினர்களின் குழந்தைகளின் திருமணம்வயது முதிர்ந்தோர் ஒய்வூதியம் திட்டம்இயற்கையாக மரணமடைந்தோருக்கு இறுதிச் சடங்கு செலவு தொகையுடன் நிதிஉதவிகள்.

உறுப்பினர்கள் திருமணம்

      பதிவு பெற்ற ஆண் உழவருக்கு ரூ8000 -மும் பெண் உறுப்பினருக்கு ரூ10000-மும் திருமண நிதியாக வழங்கப்படுகிறது

உறுப்பினர்கள் குழந்தைகள் திருமணம்

 பதிவுபெற்ற உறுப்பினா்களின் ஆண் குழுந்தைகளுக்கு ரூ8000 மும் பெண் குழுந்தைகளுக்கு ரூ10000 மும் திருமண நிதிஉதவியாக வழங்கப்படுகிறது

வயது முதிர்ந்தோர் ஒய்வூதியம்

 பதிவு பெற்ற  உறுப்பினர்களுக்கு தங்களது 60 வயது முதல் இயற்கை எய்தும் வரை ரூ1000 மாதந்தோறும் வழங்கப்படுகிறது

இயற்கை மரண நிதியுதவி திட்டம்
 இயற்கை மரணமடையும் உறுப்பினர் களுக்கு ரூ12500 நிதியுதவி (நிதியுதவி ரூ10000-மும்+ரூ2500 இறுதி சடங்குசெலவு உட்பட ) வழங்கப்படுகிறது

விபத்தினால் மரணம்
 விபத்தினால் மரணமடையும் பதிவுப் பெற்ற உழவர் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ1,02,500 (நிதியுதவி ரூ100000 + இறுதிச் சடங்கு செலவு ரூ2500) வழங்கப்படுகிறது. 
நிதி ஒதுக்கீடு
மேற்கண்டவாறு பல்வேறு நிதியுதவி திட்டங்களுக்கு சென்னை நிலச்சீர்த்திருத்த ஆணையர் மூலம் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

 
கோ.ஜெயமணிகண்டன்
ஆம் ஆத்மி கட்சி
விருதுநகர் மாவட்டம்

No comments:

Post a Comment