Tuesday, 29 November 2016

ஆண் பிள்ளைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டம்: பத்து முக்கிய அம்சங்கள்

ஆண் பிள்ளைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டம்: பத்து முக்கிய அம்சங்கள்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடர்ந்து,ஆண் குழந்தைகளின் எதிர்காலத்தைவளமாக்குவதற்காக பொன்மகன் சேமிப்புதிட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தபால் அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி(2015) மாதம் செல்வமகள் சேமிப்பு திட்டம்தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக்குதமிழகத்தில் வரவேற்பு கிடைக்கும் வகையில்சுமார் 10,60,000 கணக்குகள்தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,ஆண் குழந்தைகள் பயன்பெறும் வகையிலும்சேமிப்பு திட்டத்தை தொடங்க வேண்டும்என்ற பல்வேறு தரப்பில் இருந்து தபால்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டன. 

இதனை ஏற்று, குறைந்த மற்றும் நடுத்தரவருமானம் உள்ள குடும்பங்களில் சேமிப்புபழக்கத்தை உருவாக்கும் வகையில்‘பொன்மகன் பொது வைப்பு நிதி’ என்றதிட்டம் சென்னையில் தொடங்கப்பட்டது.


சென்னை வட்ட தபால் துறை தலைவர்மெர்வின் அலெக்சாண்டர் இந்தத் திட்டத்தின்பத்து முக்கிய அம்சங்களை குறிப்பிட்டார்.

1. பத்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள்பாதுகாவலர் உதவியோடும், 10 வயதுக்குமேற்பட்ட ஆண் குழந்தைகள் தானாகவேவந்து பொன்மகன் பொது வைப்பு நிதிதிட்டத்தில் கணக்கு தொடங்கலாம். 

2. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கவயது வரம்பு கிடையாது. 

3. குறைந்தபட்சம் ரூ.100 பணம் செலுத்திகணக்கை தொடங்கலாம். 

4. கணக்கு தொடங்கியதில் இருந்து 15ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.

5. குறைந்தபட்ச முதலீடு ரூ.500.

6. அதிகபட்ச முதலீடு நிதி ஆண்டில் ரூ.1.5லட்சம் வரை

7. இந்த சேமிப்பு கணக்குகளுக்கு 8.7% வட்டிநடப்பு நிதி ஆண்டில் (2015-16)வழங்கப்படும். 

8. ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தவேண்டிய கட்டாயம் இல்லை. 

9. கணக்கு தொடங்கிய உடன் 3-வதுஆண்டில் இருந்து கடன் வசதியும் உள்ளது.கணக்கு தொடங்கியதில் இருந்து 7-வதுஆண்டில் இருந்து 50% தொகையைபெற்றுக்கொள்ளலாம். இதை திருப்பிசெலுத்த வேண்டியதில்லை. 15 ஆண்டுகள்முடிந்த உடன் கணக்கை முடித்துக்கொள்ளலாம். 

10. இந்தத் திட்டத்தில் செலுத்தப்படும்தொகைக்கு வருமான 80 சி பிரிவில் வருமானவரி விலக்கு அளிக்கப்படுவதுடன்,வட்டிக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த வைப்பு நிதி திட்டத்தில் இணைய பி-பிரிவில் வரும் அனைத்து அஞ்சல்அலுவலகங்களையும் அணுகலாம். சென்னைவட்டத்தில் உள்ள அனைத்து தபால்அலுவலகங்களிலும் கணக்குகள் தொடங்கப்படுகிறது.

கோ.ஜெயமணிகண்டன்.
ஆம் ஆத்மி கட்சி
விருதுநகர் மாவட்டம்.

Wednesday, 16 November 2016

உழவர் பாதுகாப்புத் திட்டம்:

தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்:

ஆகஸ்ட் 15, 2005-அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்டது.இவற்றில் விவசாயத் தொழிலாளர்கள், குறு மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பயனடையும் வகையில் அவர்களது துயரத்தை நீக்கி அவர்களது சமூக பொருளாதார நிலையை உயர்த்திட “தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்” உருவாக்கப்பட்டது.தமிழகத்தில் வேளாண் தொழில் ஒன்றையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் சுமார் – 86 இலட்சம் விவசாயத் தொழிலாளர்களுக்கும், 51இலட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இப்புதிய திட்டம் அமைந்துள்ளது. 

உறுப்பினர்கள்:

18 வயது முதல் 65 வயதுடைய விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு/குறு விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர்.ஆண்/பெண் வேறுபாடின்றி இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைகின்றனர்.2001-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளர்களாக பதிவு செய்யப்பட்ட 7.32 இலட்சம் விவசாயத் தொழிலாளர்களும் இப்புதிய திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் பயன்கள்:

விவசாயத் தொழிலாளர்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தக்க பாதுகாப்பைப் பெறும் வகையில் அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இத்திட்டத்தின் மூலம் உதவிகள் வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ், உறுப்பினர்களுக்கோ, அவர்களைச் சார்ந்தவர்களுக்கோ தகுதியின் அடிப்படையில் கீழ்க்கண்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.விபத்தால் ஏற்படும் மரணம் அல்லது இயற்கையான மரணம் ஆகியவற்றிற்கு இழப்பீடு.திருமண உதவி.குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை.மகப்பேறு உதவித் தொகை60-வயதுக்கு பிறகு ஓய்வூதியம்.இவை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு உதவிகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசாணை (நிலை) எண் 540, வருவாய்த் (நி.சீ 1(2)) துறை, நாள் 19-09-2005. 

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்படி பயனாளிகளின் தகுதிகள்:

சொந்தமாக நிலம் எதுவுமில்லாது, ஊதியத்திற்காக பிறர் நிலத்தில் விவசாயம் / விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு, அத்தொழிலையே பெரிதும் நம்பியுள்ளவர்கள் விவசாயத் தொழிலாளர்கள் எனப்படுவர். 

குறு விவசாயி:

1.25 ஏக்கர் நன்செய் அல்லது 2.5 ஏக்கர் புன்செய் அல்லது அதற்கும் குறைவாக விவசாயம் செய்கின்ற விவசாயக் குடும்பத்தினர், குறு விவசாயி ஆவார். 

சிறு விவசாயி:

2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை அல்லது அதற்கும் குறைவான நிலத்தினை விவசாயம் செய்கின்ற விவசாயக் குடும்பத்தினர். சொந்த நிலமற்ற குத்தகைதாரரும் இத்திட்டத்தில் பயனடைவார்.உறுப்பினர் தகுதி பெற்றிட 18 வயது நிறைந்தவராகவும் 65-வயது நிறைவடையாதவராகவும் இருக்க வேண்டும்.ஆண்டுக்கு குறைந்தது 6-மாதங்களாவது விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். 

இத்திட்டத்தின் கீழ் சலுகை பெற

சிறு/குறு விவசாயி/விவசாய தொழிலாளராகவே இருக்க வேண்டும்.சார்ந்திருப்போர் என்பது சிறு விவசாயி / விவசாய தொழிலாளரின்மனைவி (அ) கணவர்மகன் / மகள்இறந்துவிட்ட மகனுடைய மனைவி(விதவை மருமகள்) குழந்தை மற்றும் பெற்றோர் ஆவர். 

சிறு/குறு விவசாயி/விவசாயத் தொழிலாளர்களைப் பதிவு செய்தல்:

குடும்பத்திலுள்ள 18 வயது நிறைவெய்திய ஆனால் 65 வயதுக்குள் உள்ள குறு / சிறு விவசாயி/விவசாயத் தொழிலாளர் இத்திட்டத்தில் உறுப்பினர் ஆவதற்கு, தனது பெயரை கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இத்திட்டத்தில் உறுப்பினர் ஆவதற்கு பதிவுக் கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும்.இந்த பதிவு கட்டணத்தை குறு/சிறு விவசாயி/விவசாயத் தொழிலாளர்கள் சார்பாக அரசே ஏற்கும்.ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர்கள் தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கென தனியாகக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.படிவம்-I: சிறு மற்றும் குறு விவசாயி மற்றும் விவசாயத் தொழிலாளர்கல் இத்திட்டத்தில் உறுப்பினராக இணைவதற்குரிய அனைத்து தகவல்களும் அடங்கிய படிவம் ஆகும். இதனை VAO மூலம் பெற்று பதிவு செய்து உறுப்பினராக ஆக வேண்டும்.படிவம்-II: இத்திட்டத்தில் தகுதி பெற்ற உறுப்பினர்கள் இறக்க நேரிடுகையில், தனது சார்பாக உதவித் தொகையை யார் பெற வேண்டும் என்பதனை உள்ளடக்கிய படிவம் ஆகும்.மேற்கண்ட படிவம் I மற்றும் படிவம் II இரண்டையும் சேர்த்து, குடும்ப அட்டையின் நகலுடன் VAOவிடம் அளிக்க வேண்டும்.படிவம் I மற்றும் படிவம் II குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை சரிபார்த்து, மனுதாரர் உழவுத் தொழிலை சார்ந்த குடும்பமா என களப்பணி மேற்கொண்டு, மனுதாரர் இத்திட்டத்தில் சேருவதற்கு தகுதி பெற்றவரா என்பதனை படிவம் I-இல் பரிந்துரைப் பகுதியில் – VAO பதிவு செய்ய வேண்டும்.வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) – VAO பரிந்துரை செய்த படிவம் I & II-இல் உள்ள மனுதாரர் உறுப்பினர்களின் தகுதி அடிப்படையில் சேர்த்தோ அல்லது நிராகரித்தோ ஆணை பிறப்பிப்பார்.உறுப்பினராக சேர்க்கப்பட்டவரின் குடும்ப அட்டை மற்றும் குடும்பத்தலைவரின் பெயர் கொண்ட பட்டியலை (hard copy and soft copy) மாவட்ட ஆட்சியர்(Collector), நிலச்சீர்திருத்த ஆணையருக்கு அனுப்ப வேண்டும். 

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்ட அடையாள அட்டை வழங்குதல்:

பதிவு பெற்ற உறுப்பினருக்கு அவரது குடும்பத்தினர் குறித்த விபரங்கள் உள்ளடக்கிய அடையாள அட்டை ஒன்று படிவம் III-இல் கண்டவாறு இலவசமாக வழங்கப்படும்.அடையாள அட்டை தொலைந்து போய்விட்டால் வட்டாட்சியர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரூ.10/- செலுத்தி புதிய அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.அட்டை விநியோகிக்கும் முன்னர் அட்டையில் குடும்பத் தலைவரின் கையொப்பம் அல்லது இடது பெருவிரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும்.அட்டை வழங்கும் அலுவலரின் வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஒப்பமும் பதியப்பட வேண்டும்.சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் படிவம் IV-இல் கண்டபடி உறுப்பினர் பதிவேட்டினைப் பராமரிக்க வேண்டும். 

உறுப்பினர் தகுதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் (அ) ரத்து செய்தல்:

விண்ணப்பப் படிவத்தில் பொய்யான தகவல் கொடுத்திருந்தாலோ அல்லது இத்திட்டத்தின் விதியை மீறியிருந்தாலோ அவற்றை சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் நிறுத்தி வைக்கலாம்.விசாரணைக்குப் பின்பு உறுப்பினரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பயனாளியின் உறுப்பினர் நியமனத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாம். ஆனால் நீக்கம் செய்யும் முன்பு உறுப்பினர் தமது விளக்கத்தை அளிப்பதற்கு உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும். 

மேல்முறையீடு:

உறுப்பினர் தகுதி ரத்து செய்யப்பட்டவர்கள் ரத்து ஆணை வந்த தேதியிலிருந்து 90-நாள்களுக்குள் கோட்டாட்சியர் அலுவலரிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். கோட்டாட்சியர் இந்த மேல் முறையீட்டை விரைந்து முடிப்பார்.உறுப்பினர் தகுதி ரத்து செய்யப்பட்டவர் எந்த சலுகையையும் பெற இயலாது. 

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு உதவிகள்

விபத்துக்குள்ளோருக்கான உதவித்தொகை மரணம் – ரூ. 1,00,000 (ஒரு இலட்சம்)மீட்க இயலாத மொத்த இழப்பு-இரு கைகள், இரு கால்கள், இரு கண்பார்வை இழத்தல் – ரூ. 50,000(ஐம்பதாயிரம்)மேலே குறிப்பிடாத வேறு வகையான காயம் ஏற்பட்டு உடல் உறுப்புகளை இழத்தல் – ரூ. 10,000(பத்தாயிரம்)இயற்கையான மரணம் – ரூ. 10,000(பத்தாயிரம்) (குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கப்படும்)திருமண உதவித் திட்டம் – ஆண்கள் ரூ.3000, பெண்கள் ரூ.5000பெண் உறுப்பினர்களின் மகப்பேறு உதவி திட்டம் – ரூ. 2,000 

கல்விக்கான உதவித்தொகை

பதிவு பெற்ற உறுப்பினரின் குடும்பத்திலுள்ள தகுதியுடையவரின் கல்வியை ஊக்குவிக்கவும், மேற்கொண்டு படிக்கவும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.மாணவர்மாணவி10-ஆம் வகுப்பு தேர்ச்சிரூ. 1000ரூ. 125012-ஆம் வகுப்பு தேர்ச்சிரூ. 1500ரூ. 1750தொழிற் பயிற்சி (ITI) பல்தொழில் நுட்ப பயிற்சி (Polytechnic)ரூ. 1000ரூ. 1500பட்டப்படிப்பு இளங்கலைரூ. 1500ரூ. 2000முதுகலை பட்டப்படிப்புரூ. 2000ரூ. 2500சட்டம், பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி (Professional Courses)ரூ. 2000ரூ. 2500முதுநிலை தொழிற்கல்விரூ. 4000ரூ. 4500விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகையாக ரூ. 1000 அதிகமாக வழங்கப்படுகிறது. 

VAO-வின் கடமைகள்

தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கொள்கையை மக்களுக்கு விளக்க வேண்டும்.பயனாளிகளின் தகுதிகளை அறிந்து பதிவு செய்தல்கள விசாரணை மேற்கொண்டு வட்டாட்சியருக்கு அறிக்கைகள் அனுப்புதல்படிவம் I, அதிலுள்ள சான்றிதழ், படிவம் II, குடும்ப அட்டையின் நகல் ஆகியவற்றை சரிபார்த்து படிவம் I-இல் ஒதுக்கப்பட்ட இடத்தில் VAO கையொப்பம் இட வேண்டும்.இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல்வேறு உதவித் திட்டத்தின் படி (விபத்து, மரணம், கல்வி உதவி, திருமணம், மகப்பேறு உதவித் திட்டம்) முறையான ஆய்வினை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு உதவித் தொகைக் கிடைக்க வட்டாட்சியருக்கு தேவையான உதவிகளை கிராம நிர்வாக அலுவலர் செய்ய வேண்டும்.

கோ.ஜெயமணிகண்டன்
ஆம் ஆத்மி கட்சி
விருதுநகர் மாவட்டம்

Tuesday, 15 November 2016

பிரதமர் நரேந்திர மோடி பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி?

பிரதமர் நரேந்திர மோடி பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி?

பிரதமர் நரேந்திர மோடிகடந்த மேமாதம் 9ம்தேதி அறிமுகப்படுத்தியசமூகபாதுகாப்புத்திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா. இந்தத் திட்டம்ஜூன் 1,2015ல் இருந்து செயல்படஆரம்பித்திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் இணையஎன்ன செய்யவேண்டும், எப்படிபணம் வசூலிக்கப்படும், யார்இதைநிர்வகிப்பார்கள், எவ்வளவு தொகைபென்ஷனாக கிடைக்கும்.

‘‘இந்தத் திட்டத்தின் நோக்கமேஅமைப்பு சாராத(Unorganised) துறையில் வேலை செய்பவர்கள்,ஓய்வுக்காலத்துக்குப் பின், அதாவது60 வயதுக்குப்பின் மாதம் ரூ.1,000 - 5,000 வரைஓய்வூதியம் பெற வேண்டும் என்பதுதான். அதற்காக அரசுதன் சார்பாகஒரு சிறுதொகையைச்செலுத்தும்.

யார் இணையலாம்?

18 வயது முதல் 40 வயதுடைய, இந்தியாவில் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ளஇந்தியர்யார்வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணையலாம். ஒரேகுடும்பத்தில் 18 வயதுக்குமேற்பட்டு 40 வயதுக்குள் உள்ளஅனைவரும் இந்தத்திட்டத்தில் இணையலாம்.

இந்தத் திட்டத்தில் டிசம்பர்31, 2015-க்குள் இணைபவர்களுக்கு அரசு தன் சார்பாகவருடத்துக்குரூ.1,000 அல்லது நாம் செலுத்தும்தொகையில் 50 சதவிகிதம், இவற்றில் எது குறைவோஅந்ததொகையைச்செலுத்தும்.

பென்ஷன் தொகை தரக்கூடியதிட்டங்களில் ஏற்கெனவே இணைந்திருப்பவர்கள், சமூகபாதுகாப்புத்திட்டங்களில் இணைந்திருப்பதாக கருதப்படு வார்கள். அப்படிப்பட்டசமூகபாதுகாப்புத்திட்டங்களில் இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் இணையமுடியும் என்றாலும்அரசுதன்சார்பாக செலுத்தும்தொகையை இவர்களுக்குவழங்காது. அதேபோல், வரிக்கணக்குதாக்கல் செய்பவர்களும்இந்தத் திட்டத்தில்சேரலாம் என்றாலும்அவர்களுக்கும் அரசுதன் சார்பாக செலுத்தும்தொகை கிடைக்காது.

ஒருவேளை இப்போது அமைப்புசாராதுறையில் பணியாற்றிக்கொண்டிருந்து, பிற்காலத்தில்அமைப்பு சார்ந்த துறையில்பணியில் சேர்ந்தால், எந்த வங்கிக்கிளையின் மூலம்இந்தத்திட்டத்தில்இணைந்தார் களோ, அந்த வங்கிக்கிளைக்கு உடனடியாகதெரியப்படுத்த வேண்டும்.அரசுக்கு தெரியப் படுத்தியவுடன்அரசு தன்சார்பாக செலுத்தும்தொகையைநிறுத்திக்கொள்ளும்.

எப்படி இணைவது?

எந்த வங்கிக் கிளையில்உங்களுக்கு சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்தவங்கிக்கிளையில்இந்த பென்ஷன்திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, முகவரிசான்று,புகைப்படஅடையாள அட்டை, ஆதார் அட்டைபோன்றவற்றைத் தரவேண்டும். வங்கிஉங்களுக்கு ஒரு‘ப்ரான் எண்’ணை (PRAN NO) வழங்கும். அந்த ‘ப்ரான்எண்’ணுக்குநம்கணக்கிலிருந்துபணம் கிரெடிட்செய்யப்படும். இந்த ‘ப்ரான் எண்’ நாம்அடல்திட்டத்தில்இணைந்ததற்கு ஆதாரமாக இருக்கும்.

யார், எவ்வளவு தொகைசெலுத்தலாம்?

நாம் விண்ணப்பம் பூர்த்திசெய்து தரும்போதே60 வருடங்களுக்குப் பிறகு எவ்வளவுதொகைபென்ஷனாககிடைக்க வேண்டும்என்பதைக் கேட்பார்கள். குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கிஅதிகபட்சமாக ரூ.5,000 வரை ஒருவர்பென்ஷனாக பெறநினைக்கும் தொகையைக்குறிப்பிடலாம். பென்ஷனாக பெறநினைக்கும் தொகைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும்பணம்கட்டவேண்டியிருக்கும். (பார்க்க அட்டவணை!)

முதல்முறையாக இந்தத் திட்டத்தில்இணைந்தவுடன், இந்தத் திட்டத்தில் இணைந்ததற்குசாட்சியாகஒரு சான்றிதழ்வழங்கப்படும். அதுதான் ஒருவர் இந்தத்திட்டத்தில்இணைந்ததற்கான ஆதாரம். அதேபோல் ஒவ்வொரு தவணைசெலுத்தும்போதும்உங்களுக்கு ரசீதோ அல்லது குறுஞ்செய்தியோஅனுப்பப்படும்.

எப்படி பணம் செலுத்துவது?

ஒருவர் இந்தத் திட்டத்தில்இணைந்தபின் மாதாமாதம் செலுத்த வேண்டியதொகையைஆட்டோடெபிட் மூலம் செலுத்தலாம். நம் வங்கிசேமிப்புக் கணக்கிலிருந்துகுறிப்பிட்டதொகையை எடுத்துவரவு வைக்கப்படும். நம் கணக்கிலிருந்துபணம் எடுக்கப்பட்டு,அது நம்‘ப்ரான்’ கணக்கில்வரவு வைக்கப்பட்டதும் நமக்குகுறுஞ்செய்தி அனுப்பப்படும்.




எப்போது பணம் எடுக்கப்படும்?

நாம் முதல் முறையாகஅடல் திட்டத்தில்இணையும்போது எந்த தேதியில் பணம்செலுத்துகிறோமோ, அந்ததேதிதான் நம்அடுத்தடுத்த மாதத்தின் கெடு தேதி. உதாரணமாக,ஜூன் மாதம்8-ம் தேதிமுதல் தவணைசெலுத்தி இருந்தால், அடுத்தடுத்த மாதம் 8-ம் தேதிஅன்றுதவணைக்கான பணம்எடுக்கப்படும்.

தொகையை அதிகரிக்கலாமா?

வருடத்துக்கு ஒருமுறை நாம்செலுத்தும் தொகையை அதிகரிக்கவோ அல்லதுகுறைக்கவோமுடியும். ஒவ்வொருஆண்டின் ஏப்ரல்மாதம் மட்டும்இந்த வசதிமூலம்நாம்மாதாமாதம் செலுத்தும்பென்ஷன் தொகையைஅதிகரித்துக் கொள்ளவோ அல்லதுகுறைத்துக் கொள்ளவோமுடியும்.

பணம் கட்டாவிட்டால்..?

இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின்சரியாக பணம்கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப் படும்.ரூ.1 முதல்100-க்கு ஒருமாதத்துக்கு 1 ரூபாயும், ரூ.101 முதல் 500 வரைஒரு மாதத்துக்கு2ரூபாயும், ரூ.501 முதல் 1,000 வரை ஒருமாதத்துக்கு 5 ரூபாயும், ரூ.1001-க்கு மேல்ஒருமாதத்துக்கு10 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். தொடர்ச்சியாக ஆறுமாதங்களுக்கு பணம்செலுத்தவில்லை என்றால், நம்சேமிப்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும். தொடர்ந்து24மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் சேமிப்புக்கணக்கு நிரந்தரமாகமூடப்பட்டு,திட்டத்திலிருந்து நீக்கப் படுவார்கள்.

யார் நிர்வகிக்கிறார்கள்?

இந்தத் திட்டத்தை வருங்காலவைப்பு நிதிஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (PFRDA)என்கிற அரசுஅமைப்பு நிர்வகிக்கிறது. இந்தத் திட்டத்தின்மூலம் திரட்டப்படும்நிதியில் 85%அரசுப் பத்திரங்கள் மற்றும் பாண்டுகளில்முதலீடு செய்யப்படும். மீதமுள்ள15% பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும்.

என்ன உறுதி?

நாம் இந்தத் திட்டத்தில்முதலீடு செய்யும்தொகைக்கு கூடுதல்தொகை கிடைத்தால், அந்ததொகைதிட்டத்தில் முதலீடு செய்தவருக்கே வழங்கப்படும். ஒருவேளைஉறுதிசெய்யப்பட்டதொகையைவிட குறைந்தஅளவே வருமானம்ஈட்டி இருந்தால், அதைஅரசாங்கம்சரிகட்டும்.

எப்போது க்ளெய்ம் கிடைக்கும்?

இந்தத் திட்டத்தில் இணைந்தவர்60 வயதுக்குப் பிறகு இறந்துவிட்டால், அவரது இறப்புச்சான்று,இந்தத்திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார் அட்டைவிவரங்கள், நாமினியின்ஆதார் அட்டை ஆகியஆவணங்களை திட்டத்தைநிர்வகிக்கும் வங்கிக் கிளையில்சமர்பித்தால், வங்கிஅந்த ஆவணங்களின்நகலை பிஎஃப்ஆர்டிஏவுக்குஅனுப்பும். பிஎஃப்ஆர்டிஏசான்றிதழ்களை சரிபார்த்து பென்ஷன்தொகையை நாமினிக்குவழங்கும். ஒருவேளை60வயதுக்குமுன் இறந்தால் அல்லது உயிர் போகக்கூடியநோய் காரணமாகபணத்தைத்திட்டத்திலிருந்துஎடுக்க வேண்டும்என்றால், திட்டத்தில்இணைந்தவர் எவ்வளவுதொகைசெலுத்தினாரோஅந்த தொகையும், அரசு தன்சார்பாக வழங்கியதொகைமட்டும்தான்வழங்கும்.

60 வயதுக்குப் பின் இறந்தால்...?

இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, ஒருவர் 60 வயதுமுடித்து எத்தனைஆண்டுகள் வாழ்கிறாரோ,அத்தனை ஆண்டுகளுக்கும்அவர் கோரிஇருந்தபடி பென்ஷன்தொகை கிடைக்கும்.

அவருக்குப்பின் அவர் சொல்லும்நாமினி, அதாவதுமுதல் நாமினி, இறக்கும் வரைஅதேஅளவுதொகை ஒவ்வொருமாதமும் பென்ஷனாககிடைக்கும். முதல் நாமினியும்இறந்துவிட்டால், அவர்நாமினியாக நியமித்தவருக்கு, அதாவது இரண்டாவதுநாமினிக்குஉறுதி செய்திருந்த மொத்த தொகையும்(Lumpsum) வழங்கப்படும்.

உதாரணமாக, சேகர் என்பவர்தன் 30-வதுவயதில் இந்தத்திட்டத்தில் இணைந்து மாதம் ரூ.577செலுத்திவருகிறார். அரசு தன் சார்பாக வருடத்துக்குரூ.1,000 செலுத்திவருகிறது. இவருக்கு61-ஆவது வயதிலிருந்துமாதம் ரூ.5,000 கிடைக்கும். சேகர் தன் 71-வது வயதில்இறந்துவிடுகிறார்.ஆக சேகருக்கு61 - 71 வயது வரை 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 கிடைத்திருக்கும்.

சேகர் இந்தத் திட்டத்தில்இணையும்போது நாமினியாக தனது மனைவிகமலாவைக்குறிப்பிட்டிருக்கிறார். (நாமினி கணவன்/மனைவி யாகத்தான்இருக்க வேண்டும்)எனவே, சேகர்இறந்தபின், கமலா உயிரோடு இருக்கும் வரைமாதம் ரூ. 5,000 கிடைக்கும்.கமலா தனதுநாமினியாக தன்மகன் ரமேஷைநியமித்திருப்பார். கமலா இறந்தபிறகு,ரமேஷுக்குமொத்தத் தொகையான8.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

நாமினியை மாற்றிக் கொள்ளலாமா?

இந்தத் திட்டத்தில் இணைபவர்விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது கட்டாயம்நாமினியைகுறிப்பிட வேண்டும். ஒருவேளை, நாமினிஇறந்துவிட்டால், எந்த வங்கிக்கிளையில் இந்தத்திட்டம் நிர்வகிக்கப்பட்டுவருகிறதோ, அந்தவங்கியில் சென்றுபுதிதாகவேறுஒரு நாமினியைநியமித்துக் கொள்ளலாம்.

வேறு வங்கிக் கிளைக்குமாற்றலாமா?

இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின், ஒருவர் எந்தவங்கிக் கிளைக்குவேண்டுமானாலும் இந்தத்திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், க்ளெய்ம் சமயத்தில் ஒருவரின்‘ப்ரான் கணக்கு’எங்கு நிர்வகிக்கப்படுகிறதோ, அங்குதான் க்ளெய்ம்கிடைக்கும்.

தரப்பட்ட தகவல்கள் தவறாகஇருக்கும்பட்சத்தில், திட்டத்தில் இணைந்தவர்செலுத்தியதொகைமட்டும் திரும்பவழங்கப்பட்டு திட்டத்திலிருந்து நீக்கப்படுவார். அரசு தன்சார்பாகவழங்கியதொகை கிடைக்காது'' என்றார் கணேசன்.


கோ.ஜெயமணிகண்டன்

ஆம் ஆத்மி கட்சி

விருதுநகர் மாவட்டம்